ADDED : செப் 23, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஹாஜி கமால் பாட்ஷா நினைவாக பத்தாவது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார்.
மலேசிய தொழிலதிபர் டத்தோ முகம்மது யூசுப், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீர்முகமது கல்வி உதவித்தொகை வழங்கினார். ஜமாத் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி புரவலர் முகம்மது ரபீக் செய்தி ருந்தார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை கவுரவித்தனர்.