ADDED : பிப் 19, 2024 10:51 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர்கள்சேதுராமன், ஆலிஸ், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். தேர்வில் அதிக மதிப்பெண், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
மாணவர்களின் யோகா, பிரமிடு உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
