/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபரால் தாக்கப்பட்ட காவலாளியும் பலி; கொலை எண்ணிக்கை 2 ஆனது
/
வாலிபரால் தாக்கப்பட்ட காவலாளியும் பலி; கொலை எண்ணிக்கை 2 ஆனது
வாலிபரால் தாக்கப்பட்ட காவலாளியும் பலி; கொலை எண்ணிக்கை 2 ஆனது
வாலிபரால் தாக்கப்பட்ட காவலாளியும் பலி; கொலை எண்ணிக்கை 2 ஆனது
ADDED : நவ 25, 2025 03:36 AM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் தென்னந்தோப்பில் கீழகன்னிசேரி லட்சுமணன் 70, காவலாளியாக இருந்தார். இவர் பிரண்டைக்குளம் வேலு 70, என்பவருடன் பேசியபடி நவ.,17ல் ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள வைகை ஆற்றில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் இருவரையும் தாக்கிய நிலையில் வேலு சம்பவ இடத்தில் இறந்தார். லட்சுமணன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலை தொடர்பாக என்.வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி 26, போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தாக்கப்பட்ட காவலாளி லட்சுமணனும் நேற்று இறந்தார்.
வாலிபர் மது அருந்திய போது முதியவர்கள் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.