நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நவயுகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முகமது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முஹம்மது தலைமை வகித்தார். கட்டடக்கலை துறை தலைவர் ஸ்டான்லி டேனியல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை கியூபைட் ஆர்க்கிடெக்ட் நிறுவனர் கமலஹாசன் ராமசாமி பங்கேற்றார்.
நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் இளைய ராஜா நாகேந்திர சேதுபதி பங்கேற்று ஆர்க்கிடெக் வரைபட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
துணை முதல்வர் செந்தில்குமார், கட்டடக்கலை துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.