தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சர்வர் முடக்கம் பட்டா, சிட்டா சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

சர்வர் முடக்கம் பட்டா, சிட்டா சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

சர்வர் முடக்கம் பட்டா, சிட்டா சான்றிதழ் பெறுவதில் சிக்கல்


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 06, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 06, 2026 12:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: சர்வர் அவ்வப்போது முடங்குவதால், பட்டா, சிட்டா சான்றிதழ் பெற முடியாமல் நெற்பயிர் இன்சூரன்ஸ் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் சாகுபடி செய்யப்பட்டுள்ள தானியங்கள் பாதிக்கப்படும் போது, விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில் விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெல் விவசாயிகள் நவ.,16 க்குள் திட்டத்தில் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களுக்கான பட்டா சிட்டா, 10(1) அவசியம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் அவ்வப்போது பட்டா சிட்டா சர்வர் வேகம் குறைந்து முடங்கியதால் இன்சூரன்ஸ் செய்யும் விவசாயிகள் பட்டா, சிட்டா எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us