UPDATED : நவ 20, 2026 05:22 PM
ADDED : நவ 20, 2026 05:22 PM

அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: கோப்பேரிமடம் ரோட்டில் சாய்ந்த நிலையில் உள்ள சிக்னல் கம்பங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் விலக்கில் இருந்து சித்தார் கோட்டை, பனைக்குளம் வழியாக ராமேஸ்வரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
ஒளிரும் விளக்குகளும் பழுதடைந்துள்ளன. எனவே ஆபத்தான நிலையில் உள்ள சாய்ந்த சிக்னல் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
