/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : மார் 02, 2024 04:50 AM
தொண்டி : தொண்டியில் துாத்துக்குடி கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், உயிர் பாதுகாப்பு பொருட்களும் வழங்கப்பட்டது.
தொண்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இக் கூட்டத்திற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துணை இயக்குனர் டாக்டர் ஷாசி தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், ரவீந்திரன், அருள்ராஜ் ஆகியோர் மீன்பிடி படகுகளின் மூலப்பொருட்களை கையாளும் போது தனிப்பட்ட சுகாதார அம்சங்கள் குறித்து விளக்கினர்.
மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மரைன் போலீஸ் எஸ்.ஐ., குருநாதன் ஆகியோர் கடலில் ஆபத்து ஏற்படும் போது எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

