/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : டிச 26, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடந்த முகாமை எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுகந்தி, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, கவுன்சிலர் ஜீவரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இ.சி.ஜி., மற்றும் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஏராளமானோர் பயனடைந்தனர்.

