ADDED : ஜூலை 08, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்துமுதலாம் ஆண்டுநினைவ நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டிகன்னி ராஜபுரத்தில் நடந்தது. இப்போட்டிக்கு ஆனந்த லிங்கம் தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக எஸ்.பி., சந்தீஷ் போட்டியை துவக்கி வைத்தார்.
மாவட்டவிளையாட்டு அலுவலர் தினேஷ் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் மாநில அளவில் 18அணிகள் பங்கேற்றனர். கோவை கற்பகம் யுனிவர்சிட்டி முதல் பரிசுரூ. 1 லட்சம், வெள்ளி கோப்பையும் வெள்ளி பதக்கம் பெற்றனர். இதே போன்று பதக்கம், கோப்பையை 2-வதுபரிசாக தஞ்சை பிரிஷ் யுனிவர்சிட்டி ரூ.80 ஆயிரம் ரொக்கம். மூன்றாமிடம் சேலம் சாமி அகாடமி ரூ.40 ஆயிரம், 4வது இடம்ஏ.பி.ஆர்., ஆப்பனுார் அணியினர் ரூ.40 ஆயிரம் வென்றனர்.