ADDED : டிச 26, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் மீன் மார்க்கெட் பகுதியில் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் குடியிருப்போரும், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ள மீன் மார்க்கெட் கழிவுகளும் அப்பகுதியில் தேங்கி உள்ளன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மீன் மார்க்கெட் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வலியுறுத்தி எஸ்.டி.பி. ஐ., தேவிபட்டினம் கிராம கமிட்டி தலைவர் ஹாஜி அலி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மீனவர் அணி மாவட்டத் தலைவர் பகுருதீன், திருவாடானை தொகுதி பொறுப்பாளர் முகமது ஹனீப், உறுப்பினர்கள் சையது ஜமீல், மைதீன் கலந்து கொண்டனர்.