/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் தெருநாய்கள் தொல்லை; பீதியில் மக்கள்
/
கடலாடியில் தெருநாய்கள் தொல்லை; பீதியில் மக்கள்
ADDED : ஜூலை 13, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி,: கடலாடி மெயின்ரோடு, தெருக்களில் அதிகமாக சுற்றி வரும் நாய்கள் அங்குள்ள இறைச்சி கடைகளின் முன்பாக கூட்டமாக திரிகிறது. விசேஷ காலங்களில் குப்பையில் போடப்படும் அசைவ கழிவுகளை சாப்பிடுவதற்காக நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்கிறது. இதனால் அவ்வழியாக பயணிப்போர் அச்சத்துடன் செல்கின்றனர்.
இரவு நேரத்தில் டூவீலர்களில் மற்றும் நடந்து செல்வோர்களை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தனர்.