/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவருக்கு 'தொல்லை' சக மாணவர்கள் மீது வழக்கு
/
மாணவருக்கு 'தொல்லை' சக மாணவர்கள் மீது வழக்கு
ADDED : நவ 19, 2025 06:21 AM
ராமநாதபுரம்: அரசு விடுதியில், மாணவருக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில், சக மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும், 13 வயது மாணவர் டி - பிளாக் சாலை அம்மா பூங்கா அருகே உள்ள அரசு சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கிறார்.
இவரை ஒரு வாரமாக விடுதியில் உள்ள, மூன்று மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதிபெயர் கூறி மிரட்டியதாக மாணவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மகளிர் போலீசார், மூன்று மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் மீது போக்சோ, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில் விசாரணை நடக்கிறது.

