தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீன்  வியாபாரிகளுக்கு மானிய விலை டூவீலர்

மீன்  வியாபாரிகளுக்கு மானிய விலை டூவீலர்

மீன்  வியாபாரிகளுக்கு மானிய விலை டூவீலர்


UPDATED : ஜூலை 20, 2026 07:28 PM

ADDED : ஜூலை 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 07:28 PM ADDED : ஜூலை 20, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீன் விற்பனை செய்யும் 42 வியாபாரிகளுக்கு ஐஸ் பெட்டியுடன் கூடிய டூவீலர் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

டூவீலரின் மொத்த விலையான ரூ.75 ஆயிரத்து 272ல் மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.45,272 மற்றும் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் ரூ.30 ஆயிரத்து 272 வீதம் வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பாண்டில் 42 மீன் வியாபாரிகளின் பங்குத்தொகையானது கேட்பு வரைவோலையாக பெறப்பட்டு டாப்கோபெட் மூலமாக சம்பந்தப்பட்டநிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஐஸ் பெட்டியுடன் கூடிய டூவீலர்களை 6 பேருக்கு வழங்கினார். 36 பேருக்கு விரைவில் மானிய விலையில் வழங்கப்பட்டவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us