/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடைக்காலம் எதிரொலி பழங்கள் விற்பனை ஜோர்
/
கோடைக்காலம் எதிரொலி பழங்கள் விற்பனை ஜோர்
ADDED : ஏப் 21, 2025 05:34 AM

தொண்டி: திருவாடானை, தொண்டி ஆகிய இடங்களில் வெப்பத்தை தணிக்கும் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சி தரும் பழங்களை சாப்பிடுகின்றனர்.
திருவாடானை, தொண்டி, நம்புதாளை, சின்னக்கீரமங்கலம், எஸ்.பி.பட்டினம் போன்ற பகுதிகளில் தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, பலாபழம் விற்பனை அமோகமாக நடக்கிறது.
வெளிமாவட்டங்களில் சாகுபடி செய்யபட்ட பழங்களை வாங்கிவந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களிலும், ரோட்டோரங்களிலும் வைத்து விற்பனை செய்கின்றனர்
தர்பூசணி கிலோ ரூ.20க்கும், சாத்துக்குடி ரூ.70க்கும், பலாபழம் ரூ.30க்கும் விற்கிறது.