/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
60 கிராமங்களில் பராமரிப்பு இல்லாத தடுப்பணைகளால் அரசு நிதி வீணடிப்பு; மராமத்து பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை

UPDATED : அக் 02, 2025 05:51 AM
ADDED : அக் 02, 2025 03:17 AM

கடலாடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான தடுப்பனைகள் பராமரிப்பு இன்றி உள்ளன. குறிப்பாக கடலாடி யூனியனுக்குட்பட்ட 60 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2018 முதல் 2023 வரை நுாற்றுக்கு மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
ரூ. 7 லட்சம் முதல் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தற்போது பல இடங்களில் பராமரிப்பின்றி பொலிவிழந்து இடிபாடுகளுடன் உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாய நிலங்களின் அருகேயும் ஓடைகளின் நுழைவாயில் பகுதி மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை கணக்கிட்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் அதிகளவு சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
தற்பொழுது மழை காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு பெரும்பாலான தடுப்பணைகளின் நடுப்பகுதிகளில் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் சேமிக்க இயலாதவாறு வழிந்தோடும் நிலை உள்ளது.
எனவே தரமற்ற தடுப்பணைகளால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
நீரின் வழித்தடத்தை ஆராய்ந்தும், தேவையான இடங்களில் தண்ணீர் தேக்கி அதன் மூலம் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்பட்ட தடுப்பணைகள் தற்போது பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்தும் காணப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
எனவே கடலாடி யூனியன் நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க அப்பகுயில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும், கண்மாயின் வழித்தடங்களில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி வாறுகால்வாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.