ADDED : பிப் 10, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இக்கோயிலில் பிப்.4ல் கும்பாபிஷேக விழா துவங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. பிப்.7ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி யாகசாலை பிரவேசம் நடந்தது. இன்று காலை 9:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

