நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடியில் கைலாசநாதர், மீனாட்சி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பு பெற்றதாகும்.
இக்கோயிலில் நேற்று காலை மதியம் 3:00 மணி வரை அருப்புக்கோட்டை கையிலைமலை ராமசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் திருவாசகம் முற்றோதல் பாடினர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன், பேஸ்கார் சீனிவாசன் மற்றும் சாயல்குடி கைலாசநாதர் விழா குழுவினர் செய்தனர்.