/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிக மதிப்பெண் எடுத்த இரட்டையர்
/
அதிக மதிப்பெண் எடுத்த இரட்டையர்
ADDED : மே 17, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்த நாகநாதன் மகன்கள் பூஜா ஸ்ரீ, மீராஜா ஸ்ரீ.
இரட்டையரான இருவரும் கமுதி ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். மாணவி பூஜா ஸ்ரீ பத்தாம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண் எடுத்து மாநில அளவில்நான்காம் இடமும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இவரது சகோதரிமீராஜா ஸ்ரீ இதே பள்ளியில் பத்தாம் வகுப்பில் 486 மதிப்பெண் பெற்றுள்ளார். இரட்டையர்களான இருவரும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர்.மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.