/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னேற விழையும் தாலுகா மாவட்டத்தில் திருவாடானை தேர்வு
/
முன்னேற விழையும் தாலுகா மாவட்டத்தில் திருவாடானை தேர்வு
முன்னேற விழையும் தாலுகா மாவட்டத்தில் திருவாடானை தேர்வு
முன்னேற விழையும் தாலுகா மாவட்டத்தில் திருவாடானை தேர்வு
ADDED : அக் 29, 2025 02:36 AM
திருவாடானை: இந்திய அளவில் மத்திய அரசின் முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் வெற்றி பெற்றதின் அடிப்படையில் முன்னேற விழையும் வட்டாரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வட்டாரங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த உருவாக்கப்பட்ட திட்டம்.
வளர்ச்சியடையாத பகுதிகளை மேம்படுத்தவும், அவற்றின் பொருளாதார நிலையை உயர்த்துவது, வட்டார அளவிலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே நோக்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு ைஹதராபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருவாடானை தாலுகாவில் இருந்து வேளாண்மை துறை சார்பில் உதவி இயக்குநர் தினேஸ்வரி கலந்து கொண்டார். இப் பயிற்சியில் நவீன விவசாய தொழில் நுட்பங்கள், வேளாண் விரிவாக்கத்தை வலுப்படுத்துவது, நெல் உற்பத்தியை பெருக்குவது, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

