தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கியூ ஆர் கோடு வாயிலாக அரசு பஸ்களில் டிக்கட்

 கியூ ஆர் கோடு வாயிலாக அரசு பஸ்களில் டிக்கட்

 கியூ ஆர் கோடு வாயிலாக அரசு பஸ்களில் டிக்கட்


ADDED : டிச 03, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: அரசு பஸ்களில் கியூ ஆர் கோடு வாயிலாக பஸ்களில் டிக்கெட் வழங்கப்பட்டாலும் அதனை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தாமல் உள்ளதால் சில்லரை பிரச்னை அதிகரித்துள்ளது.

தேவகோட்டை அரசு பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படும் மொபசல் மற்றும் டவுன் பஸ்களில் கியூ ஆர் கோடு வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றில் விரைவு பஸ்களும் உள்ளன.

தற்போது பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண்டக்டரிடம் சில்லரை பிரச்னை குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை பயன்படுத்தாமல் உள்ளனர். கண்டக்டர்கள் கூறியதாவது:

கியூ ஆர் கோடு வாயிலாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதி, பயணியர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் வெளியூர் செல்லும் பஸ்களில் தொலைதுாரம் பயணிப்போர் மட்டுமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்கின்றனர். பெரும்பாலான பயணிகள் கியூ ஆர் கோர்டு வாயிலாக பணம் செலுத்த முற்படுவதில்லை. கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்து கின்றனர்.

கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொதுமக்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்தால் கூட இதை பயன்படுத்தி பயணிக்கலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us