UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (அக்.,17) நவீன ஆயுதங்கள் கண்காட்சி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் காவலர் நினைவு நாளை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிடலாம்.
