UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 05:47 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி தலைமை அஞ்சலகங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட 29 துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் அக்.,11ல் சிறப்பு ஆதார் முகாம் நடக்கிறது. இதை பயன்படுத்தி மக்கள் ஆதார் பெயர் மாற்றம், புதுப்பித்தல், புதிதாக பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் கோட்டக் கண்காணிப்பாளர் உஷாராணி தெரிவித்துள்ளார். ––
