ADDED : அக் 09, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தொழிலாளர் கொள்கையை வெளியிட வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி., தொழிற் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர் கூறியதாவது:
தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் நலன் காப்பதில் கீழ் நிலையில் உள்ளது. தமிழகத்தில் 3.30 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் நலன் குறித்து மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவில் விவாதித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 'தமிழ்நாடு தொழிலாளர் கொள்கை' வெளியிடப்படவில்லை. குறைந்தப்பட்ச ஊதியம் ரூ.24 ஆயிரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.
மாவட்ட தலைவர் ராதா, கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட செயலாளர் தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.