ADDED : செப் 20, 2025 11:38 PM
திருவாடானை: திருவாடானை வேளாண் துறை சார்பில் பழங்குளம் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி நடந்தது. பரமக்குடி வேளாண் உதவி இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் தலைமை வகித்தார். விதை தேர்வு, விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், சூடோமோனஸ் ப்ளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பூஞ்சானக் கொல்லிகளையும் பயன்படுத்துவதால் நோய் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்றலாம் என்றார்.
டி.ஏ.பி மற்றும் நுண்ணுாட்டச் சத்துக்களை கடைசி உழவின் போது அடி உரமாக இட வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள், பயிர் சுழற்சி, தரிசு நிலங்களை அகற்றி விளை நிலங்களாக மாற்றி சிறுதானியங்கள் சாகுபடி செய்தல் போன்ற தகவல்கள் குறித்து பேசப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், ராஜேஸ்வரி செய்திருந்தனர்.