ADDED : பிப் 18, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நிழற்வேணி. தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், நானும், எனது தயாரும் வசித்து வந்த குடிசை வீடு தீ விபத்தில் எரிந்து விட்டது. இதற்கு அரசு எந்த உதவியும் தரவில்லை. தற்போது வீடு இல்லாமல் சிரமப்படுகிறோம். எங்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.