/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்களுக்கு பல்கலை தேர்வு
/
பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்களுக்கு பல்கலை தேர்வு
பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்களுக்கு பல்கலை தேர்வு
பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்களுக்கு பல்கலை தேர்வு
ADDED : ஜூலை 26, 2025 11:33 PM

ராமநாதபுரம்:-பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக்கல்லுாரி பல்கலை சார்பில் செயல்முறை தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறை, மதுரை கலைப்பண் பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட பகுதி நேர கலைப்பயிற்சி மையத்தில் பயின்று நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக்கல்லுாரி பல்கலையின் செயல்முறை தேர்வு ராமநாதபுரம் டி.டி விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடந்தது.
இதில் சிலம்பாட்டத்தில் 83 மாணவர்கள், கரகாட்டம் 11, கிராமிய பாடல் 20, ஒயிலாட்டம் 37, உட்பட 151 மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வாளர்களாக ராமேஸ்வரம் கலாம் மற்றும் கலை அறிவியல் கல்லுாரி நாட்டுப்புற கலை ஆசிரியர் கதிர்வேல், கலை சுடர்மணி செல்வராணி, கலை நன்மணி ராமமூர்த்தி ஆகியோர் புறத்தேர்வாளர் களாக பங்கேற்றனர்.
நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தின் ஒயிலாட்டம் ஆசிரியர் ராம கிருஷ்ணன், கரகாட்ட ஆசிரியர் பாண்டியம்மாள், கிராமிய பாடல் ஆசிரியர் இருளாண்டி, சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன் ஆகியோர் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களை தயார் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தார்.------