/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு! கிலோ ரூ.20 வரை அதிகரிப்பால் விற்பனை மந்தம்

ADDED : நவ 05, 2025 08:57 PM

மாவட்டத்தில் மிக குறைந்த அளவே காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் காய்கறிகள், பழங்கள் ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக வெளியூர்களிலிருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
மேலும் முகூர்த்தங்களால் தேவை அதிகரித்துள்ளதால் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி(கிலோவில்) தக்காளி ரூ.50, கத்தரிக்காய் ரூ.80, வெண்டை ரூ.60, பச்சைமிளகாய்- ரூ.50,, சி.வெங்காயம் 50, பல்லாரி ரூ. 20 முதல் ரூ.30 வரை, இஞ்சி ரூ.60, கொத்தமல்லி ரூ.50, கறிவேப்பிலை ரூ.50, உருளை ரூ.50, முட்டைகோஸ் ரூ.30, காரட் ரூ.60, முருங்கை பீன்ஸ் ரூ.70 என தரத்திற்கு ஏற்ப காய்கறிகள் விற்கப் படுகிறது.
விலை உயர்வால் மக்கள் வாங்குவதை குறைத்து விட்டதால் மொத்தமாக விற்க முடியாமல் வாரச்சந்தையில் கத்தரி, வெண்டை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றைசிறிய கூறுகளாக வைத்து ரூ.20 வரை சில்லரை விலைக்கு விற்கின்றனர். அடுத்து கார்த்திகை மாதம் சபரிமலை சீசன், முகூர்த்த நாட்கள் அதிகம் வர உள்ளதால் காய்கறிகளின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் கூறினர்.-------