/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஊர்வலம்
/
கமுதி அருகே கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஊர்வலம்
கமுதி அருகே கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஊர்வலம்
கமுதி அருகே கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஊர்வலம்
ADDED : நவ 14, 2025 02:00 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா நடக்கும்.
இதனை முன்னிட்டு கமுதி பேரூராட்சிக்குட்பட்ட கண்ணார்பட்டி அருகே முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டது. நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராம மக்கள் மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கண்களை துணியால் கட்டி தீப்பந்தங்கள் ஏந்தி பஸ் ஸ்டாண்ட் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக 2 கி.மீ.,க்கு துாக்கி சென்றனர்.
பின் நாராயணபுரம் முத்தாலம்மன் பீடத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பிறகு முத்தாலம்மன் சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிராமத்திற்கு வெளியே உடைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
தற்போதைய தொழில் நுட்ப காலத்தில் திருவிழாக்களில் சீரியல் விளக்குகள், அதிகம் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் இரு கிராமத்தினரும் நுாற்றாண்டுகளுக்கும் மேலாக இத்திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

