/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எல்.ஓ.,க்களிடம் படிவம் பெற ஆர்வம் காட்டும் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை

ADDED : நவ 07, 2025 03:47 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்காக செல்லும் பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் ஆர்வமாக படிவங்களை வாங்கினர்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நவ.,4 முதல் துவங்கின. திருவாடானை சட்டசபை தொகுதியில் ஒவ்வொரு பி.எல்.ஓ.,க்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கான படிவங்களை வீடுகள் வாரியாக வழங்கத் துவங்கினர். ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய இரு படிவங்கள் வழங்கப்பட்டன. படிவம் வழங்கும் போது அதற்கான பிரத்யேக செயலியில் படிவத்தில் இருந்த கியூ.ஆர்.,கோடை ஸ்கேன் செய்து வழங்கியதாக பதிவேற்றம் செய்தனர். வீடுகளுக்கு பி.எல். ஓ.,க்கள் செல்லும் போது குடும்பத்தில் உள்ளவர்கள் விபரங்களை கூறி படிவங்களை வாக்காளர்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர். தொண்டி அருகே நம்புதாளையில் தாளை எழுச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பி.எல்.ஓ.,க்களை வீடுகளுக்கு அழைத்து சென்று வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்க உதவியாக இருந்தனர். படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது வாக்காளர்கள் சிறப்பு திருத்தப் பணிகள் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
தொண்டியை சேர்ந்த கண்ணன் கூறுகையில், எனது பெயர் வாக்காளர் படிவத்தில் இரு இடங்களில் உள்ளது. நானும் பல முறை நடந்த முகாம்களில் ஒரு பெயரை நீக்கக் கோரி மனு கொடுத்தேன். ஆனால் நீக்கவில்லை. தற்போது சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறுவதால் கண்டிப்பாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பி.எல்.ஓ., க்கள் கூறுகையில், படிவங்கள் வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார். எனவே படிவங்கள் வழங்கும் பணியை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.