/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுகாதார வளாகம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்
/
சுகாதார வளாகம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்
ADDED : ஜூலை 20, 2025 10:58 PM

கமுதி: கமுதி பேரூராட்சி 5வது வார்டில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பு பணி செய்துள்ள நிலையில் பயன்பாடியின்றி உள்ளது.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு காமாட்சி செட்டியார் தெரு, சுப்பையா தேவர் காலனி, பஜனைமட தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி செட்டியார் தெருவில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
பிறகு சுகாதார வளாகம் முறையாக மராமத்து செய்யப்படாததால் புதர்மண்டி பயனற்ற நிலைக்கு மாறியது. இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதி பேரூராட்சி சார்பில் துாய்மைப் பாரத இயக்கம் 2024--25ம் ஆண்டு ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பராமரிப்பு பணி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடின்றி உள்ளது. பராமரிப்பு பணி செய்துள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.