/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் ஏட்டு பலி
/
பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் ஏட்டு பலி
ADDED : அக் 30, 2025 02:54 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா, 63வது ஆண்டு குருபூஜை விழா நாளை (அக்.,30ல்) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீஸ் ஏட்டு கலைவாணி 41, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார். பசும்பொன் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பணி முடித்து கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ்-ல் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கலைவாணி மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர்.

