/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழா
/
கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழா
ADDED : மார் 11, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கல்லுாரியில் மகளிர் தினவிழா நடந்தது.முதல்வர் எம்.மீரா தலைமை வகித்தார்.
மவுன மொழி, ஆடை அணிவகுப்பு போன்ற போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம், மலபார் கோல்டன் டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு, மருத்துவத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் நுண்ணுயிரியல் துறை மாணவிகள் அதிகளவில் பரிசுகளை வென்றனர். கல்லுாரி கலை நிகழ்ச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரியலட்சுமி, நதியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

