/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
ADDED : செப் 27, 2025 11:25 PM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
முதுகுளத்துார் -சிக்கல் ரோடு மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் 2 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்ற னர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்கப் படவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விலக்கு ரோட்டில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.