தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மிளகாய் நாற்று வயலில் நடும் பணி மும்முரம்

மிளகாய் நாற்று வயலில் நடும் பணி மும்முரம்

மிளகாய் நாற்று வயலில் நடும் பணி மும்முரம்


UPDATED : நவ 07, 2026 03:08 PM

ADDED : நவ 07, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 03:08 PM ADDED : நவ 07, 2026 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் நாற்று வயலில் நடும் பணியில தீவிரம் காட்டுகின்றனர்.

இங்கு நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக மிளகாய், பருத்தி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். முதுகுளத்துார் அருகே காக்கூர், கருமல், கீழத்துாவல், புளியங்குடி, தேரிருவேலி, அப்பனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தின் ஓரத்தில் மிளகாய் நாற்று வளர்ப்பதற்காக சுத்தம் செய்து விதைகள் விதைத்துள்ளனர்.

தினந்தோறும் காலை, மாலையில் தண்ணீர் தெளித்து வந்த நிலையில் மிளகாய் நாற்று நன்கு வளர்ந்துள்ளது. முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது. இதையடுத்து வளர்ந்துள்ள மிளகாய் நாற்றுகளை ஒரு கட்டு ரூ.100 முதல் 200க்கு விலைக்கு வாங்கி கூலி வேலைக்கு ஆட்கள் வைத்து வயலில் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மிளகாய் செடிகளுக்கு குறைந்தளவு தண்ணீர் போதுமானதால் மிளகாய் நாற்று வளர்க்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us