ADDED : நவ 07, 2026 03:08 PM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: பெரியபட்டினம் முத்தரையர் நகரை சேர்ந்தவர் சமஸ்தானம். இவரது மகன் மாசாணம் 43, கூலி தொழிலாளியான இவர் இன்று (நவ.,7) அதிகாலை 5:00 மணிக்கு எழுந்தவுடன் டீ குடிப்பதற்காக வெளியே நடந்து சென்றார். சிறிது துாரம் சென்ற நிலையில் தங்கையா நகர் பகுதியில் உயரழுத்த மின்கம்பி இரவில் பெய்த மழையில் அறுந்து கிடந்தது.
இதை கவனிக்காத கூலித் தொழிலாளி மாசாணம் உயரழுத்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாசாணம் மனைவி லட்சுமி அளித்த புகாரில் திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர். மழை காலங்களில் அறுந்து கிடக்கும் உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மின்வாரியம் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
