ADDED : ஜூலை 10, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: ஜூலை 10--: ஜூலை 11ல் உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வாரம் முழுவதும் உலக மக்கள் தொகை தினத்திற்கான விழிப்புணர்வு கண்காட்சி கள் நடைபெற உள்ளது.
தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் பற்றி பல்வேறு வகைகளில் விளக்கம் அளிக்கப் பட உள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் கருத்தடை முறைகள் பற்றி கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
