/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூரிய வீடு மின்சார திட்டத்தில் மாதந்தோறும் கட்டணம் சேமிக்கலாம்
/
சூரிய வீடு மின்சார திட்டத்தில் மாதந்தோறும் கட்டணம் சேமிக்கலாம்
சூரிய வீடு மின்சார திட்டத்தில் மாதந்தோறும் கட்டணம் சேமிக்கலாம்
சூரிய வீடு மின்சார திட்டத்தில் மாதந்தோறும் கட்டணம் சேமிக்கலாம்
ADDED : ஆக 06, 2025 08:52 AM
ராமநாதபுரம் : சூரிய வீடு மின்சார திட்டத்தில் மத்திய அரசு மானியத்துடன் சோலார் பேனல் அமைத்து வீட்டு மின் நுகர்வோர்கள் மாதம் ரூ.1250 வரை மின் கட்டணத்தை சேமிக்க முடியும்.
ராமநாதபுரம் மின்பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் வெண்ணிலா கூறியிருப்பதாவது:
பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டம் ரூ.75 ஆயிரத்து 21 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2026-27 நிதியாண்டு வரை செயல்படுகிறது. 1 கிலோ வாட் ரூ.30ஆயிரம், 2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட், அதற்கு மேல் அமைக்க ரூ.78 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறலாம். பணி முடிந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மானியம் நேரடியாக வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஒரு கிலோ வாட் சோலார் பேனல் மூலம் தினமும் 4 முதல் 5 யூனிட்கள் மின் உற்பத்தி செய்யலாம். மாதத்திற்கு 500 யூனிட்டுகள் மின் உபயோகிக்கும் குடும்பங்கள் ரூ.1250 வரை மின் கட்டணத்தில் சேமிக்க முடியும். திட்டத்தில் பயன்பெற மின் கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதும்.
https://consumer.pmsuryaghar.gov.in/consumer/ என்ற முகவரியில் விண்ணப்பித்து மின்நுகர்வோர்கள் பயன் பெறலாம் என்றார்.