/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
ADDED : நவ 01, 2024 07:23 PM
அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்-- - ஆனந்தி தம்பதியின் மூத்த மகன் லோகேஷ், 11. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வயல்வெளியில் கட்டியிருந்த பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக லோகேஷ் தனியாக சென்றார்.
அப்போது, வயல்வெளியில் இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். நேற்று முன்தினம் இரவு முழுதும் லோகேஷ் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை பாழடைந்த கிணற்றில் லோகேஷ் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினர், அவரது பெற்றோர் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாணவனின் உடலை மீட்டனர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

