/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சித்திரை பிரம்மோற்சவம் ஆலோசனை கூட்டம்
/
சித்திரை பிரம்மோற்சவம் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 24, 2025 10:00 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கரில் உள்ளது.
இக்கோவிலில், வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா எழுந்தருள உள்ளார். இதில், 8ம் தேதி தேர் திருவிழா நடைபெறும்.
இது தொடர்பாக நேற்று, சோளிங்கர் பெருமாள் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கோவில் உதவியாளர் ராஜா, கண்காணிப்பாளர் கவுசல்யா மற்றும் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
பிரம்மோத்சவத்தின் போது மாடவீதிகளில் ஆக்கிரமிப்புகள், மின்கம்பிகளை அகற்றுவது, போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.