/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
/
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 14, 2025 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புதிதாக பெரியாண்டவர் உற்சவர் சிலை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, நாளை, காலை 6:30 மணிக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும், 10:00 மணி அளவில் பால்குட ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, பிற்பகல், 12:00 மணிக்கு கலசப் புறப்பாடு மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.