/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
6 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாயமான தாயை தேடும் போலீஸ்
/
6 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாயமான தாயை தேடும் போலீஸ்
6 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாயமான தாயை தேடும் போலீஸ்
6 மாத குழந்தையை தவிக்கவிட்டு மாயமான தாயை தேடும் போலீஸ்
ADDED : அக் 27, 2025 11:58 PM

புலிவலம்: சோளிங்கர் பஸ் நிலையம் அருகே, ஆறு மாத ஆண் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாயை போலீசார் தேடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை, 28 வயது பெண் ஒருவர், ஆறு மாத பச்சிளம் ஆண் குழந்தையுடன் வந்தார். அங்கு சாலையோர கடைக்கு வந்த பெண், அங்கிருந்த நரிக்குறவர் பெண்ணிடம், தான் கழிப்பறைக்கு சென்று வருவதாகவும், அதுவரை குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு, குழந்தையை கொடுத்து சென்றார்; பின், அவர் திரும்ப வரவில்லை.
குழந்தை பசியில் அழுததால், சோளிங்கர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் குழந்தையை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து, சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை தேடுகின்றனர்.