/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் கோவில் உண்டியல் வசூல் ரூ.32 லட்சம்
/
சோளிங்கர் கோவில் உண்டியல் வசூல் ரூ.32 லட்சம்
ADDED : ஜன 23, 2025 08:45 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
யோக நரசிம்ம சுவாமி மலையடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் எனப்படும் தக்கான் குளம் உள்ளது. சோளிங்கரில் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில், 32.69 லட்சம் ரூபாய், 33 கிராம் தங்கம் மற்றும் 165 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
இது, கடந்த டிச., 20ம் தேதியில் இருந்து, நேற்று வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் விபரம் என, தேவஸ்தான இணை ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார்.

