ADDED : ஜூன் 10, 2025 11:38 PM
அரக்கோணம்,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மோசடியில் சிலர் ஈடுபட்டு வந்தனர். அரக்கோணம் அம்மனூரை சேர்ந்த குணசேகரன் 62, அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் 65, அசோக்நகரை சேர்ந்த நித்யானந்தம் 55 ஆகிய மூவரை கடந்த சில மாதங்களுக்கு முன் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் ராணிப்பேட்டை எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரைபடி கலெக்டர் சந்திரகலா மூவரையும் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அரக்கோணம் டவுன் போலீசார் குணசேகரன், ராஜ்குமார், நித்யானந்தம் உள்ளிட்ட மூவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான கடிதத்தை வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று அளித்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
