/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவை, பெங்களூருக்கு சாலை வசதிவாழை விவசாயி பயன்படுத்த அறிவுரை
/
கோவை, பெங்களூருக்கு சாலை வசதிவாழை விவசாயி பயன்படுத்த அறிவுரை
கோவை, பெங்களூருக்கு சாலை வசதிவாழை விவசாயி பயன்படுத்த அறிவுரை
கோவை, பெங்களூருக்கு சாலை வசதிவாழை விவசாயி பயன்படுத்த அறிவுரை
ADDED : பிப் 14, 2025 01:29 AM
கோவை, பெங்களூருக்கு சாலை வசதிவாழை விவசாயி பயன்படுத்த அறிவுரை
மேட்டூர்:சேலம் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், மாவட்ட அளவில், 2 நாள் வாழை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு கொளத்துாரில் நேற்று நடந்தது. சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா தொடங்கி வைத்தார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசுகையில், ''சேலம் மாவட்டத்தில், 4,000 ெஹக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயி
கள் கதலி, நேந்திரம் உள்ளிட்ட வாழைகளை சாகுபடி செய்கின்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வாழை பழங்கள் அனுப்பப்
படுகின்றன. வாழை வளர்ப்பில் தொழில்நுட்பங்களை கையாள்வதற்கான கருத்தரங்கில், அலுவலர்கள் மட்டுமின்றி விவசாயிகளும், அனுபவங்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இருந்து வாழைகளை, கோவை, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்ல சாலை வசதி சிறப்பாக உள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொடர்ந்து விவசாயிகளுக்கு வாழை தோட்டங்களுக்கு சென்று வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மாலதி, வாழை வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து பேசினார். மேலும் பல வகை வாழைத்தார்கள், மதிப்பு கூட்டப்பட்ட வாழை தண்டு ஜூஸ், ஊறுகாய், தொழில்நுட்ப கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.