/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் திருவிழா கத்தி மீது நடந்த பூசாரி
/
கோவில் திருவிழா கத்தி மீது நடந்த பூசாரி
ADDED : ஜன 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் திருவிழா கத்தி மீது நடந்த பூசாரி
தாரமங்கலம், :தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, கிழக்குமேடு கொடியன் வளவில் உள்ள காசி காலபைரவர், ராஜமுனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த, 14ல் பூச்சாட்டப்பட்டது. இதில் அருகே உள்ள உலகேஸ்வரர் கோவிலில் இருந்து, நேற்று திரளான பக்தர்கள், தீர்த்தக்குடம், பால்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். அதற்கு முன்புறம், கோவில் பூசாரி, கூர்மையான கத்தி மீது நடந்து வந்தார். அப்போது பக்தர்களுக்கு, அருளாசி வழங்கினார். மேலும் ஏராளமான பக்தர்கள், காலபைரவரை வழிபட்டனர்.