/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளி கொலுசு உற்பத்தி: வங்கி அதிகாரி ஆய்வு
/
வெள்ளி கொலுசு உற்பத்தி: வங்கி அதிகாரி ஆய்வு
ADDED : பிப் 07, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளி கொலுசு உற்பத்தி: வங்கி அதிகாரி ஆய்வு
சேலம் : சேலம், பனங்காட்டில் உள்ள வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் விற்பனை மையத்தில், தமிழ்நாடு நபார்டு வங்கி பொது மேலாளர் ஹரிகிருஷ்ணராஜ், நேற்று ஆய்வு செய்தார். வெள்ளி உற்பத்தி குறித்து வங்கி சார்பில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க, வேலை வாய்ப்பை அதிகரிக்க, தொழில் கடன் வழங்க, ஆய்வு நடந்தது. அவரிடம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்கத்தலைவர் ஆனந்தராஜ், மானியத்துடன் கடன் வழங்க கோரிக்கை விடுத்தார். மண்டல பொது மேலாளர் சந்தானம், சங்க செயலர் முனியப்பன், துணைத்
தலைவர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

