ADDED : ஜன 15, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,:
சேலம், குரங்குச்சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் கடந்த கார்த்திகையில் மண்டல பூஜை தொடங்கி, தினமும் பல்வேறு பூஜை நடந்தது. கடந்த, 1ல் மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்து, தினமும் பல்வேறு வித ஆராதனைகள், பூஜைகள், கேரள முறைப்படி நடந்தன.
மகரஜோதி உற்சவ நாளான நேற்று, ஐயப்பனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் பால், இளநீர், நெய் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பனின் ஆபரண பெட்டி, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக, 5 ரோடு, ஏ.வி.ஆர்., ரவுண்டானா வழியே கோவிலை அடைந்தது.
அங்கு பூஜை செய்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சனை நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின் கோவில் எதிரே நகரமலையில் மகர ஜோதி காட்டப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.