/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2025 01:08 AM
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
சேலம்,:தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. தலைவி லட்சுமி தலைமை வகித்தார். தமிழக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.
சத்துணவு திட்டத்தில், 40 ஆண்டாக வேலை செய்யும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளரை, தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குதல்; தொகுப்பூதிய பணி நியமனத்தை ரத்து செய்து காலி பணியிடத்தை, காலமுறை ஊதியத்தில் நிரப்புதல்; காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தல்; குடும்ப ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாவட்ட துணைத்தலைவர்கள் கலாவதி, பழனிசாமி, இணை செயலர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.