/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை திருமணம் வாலிபர் மீது சிறுமி புகார்
/
குழந்தை திருமணம் வாலிபர் மீது சிறுமி புகார்
ADDED : மார் 09, 2025 01:53 AM
குழந்தை திருமணம் வாலிபர் மீது சிறுமி புகார்
ஏற்காடு:ஏற்காடு, கரடியூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:
தாய்க்கு உடல்நிலை சரியின்றி, 10ம் வகுப்பில் பாதியில் நின்றுவிட்டேன். கோவையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கடந்த நவ., 5ல் அத்தை சித்ரா, என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார். நவ., 11ல், பொம்மிடியில் உள்ள கோவிலுக்கு சுவாமி கும்பிட போவதாக அழைத்துச்சென்றார். அங்கு ஏற்காடு, செம்மநத்தத்தில் வசிக்கும் ராமர், 38, என்பவருடன், கட்டாய திருமணம் செய்து வைத்தார். பெற்றோர், பாட்டி, மாமா, ராமரின் தந்தை பழனிசாமி, தாய் சந்திரா உடனிருந்தனர். பின் ராமர் வீட்டில் தங்கியபோது, அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். என் தாய்மாமா சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததால், அவர் அறிவுறுத்தல்படி புகார் அளிக்கிறேன். கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள், பாலியல் தொந்தரவு செய்த ராமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து, போக்சோ, குழந்தை திருமண சட்டங்களில் வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.