/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி மோதி தொழிலாளி பலிமனைவி, குழந்தை படுகாயம்
/
லாரி மோதி தொழிலாளி பலிமனைவி, குழந்தை படுகாயம்
ADDED : மார் 15, 2025 02:47 AM
லாரி மோதி தொழிலாளி பலிமனைவி, குழந்தை படுகாயம்
சங்ககிரி:தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, சமத்தாள் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அம்சராஜ், 30. இவரது மனைவி சரண்யா, 23. இவர்களது குழந்தை தனுஷ், 2. இவர்கள், திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில், 'சிப்ஸ்' வியாபாரம் செய்ய, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அம்சராஜ் ஓட்டினார். நேற்று காலை, 10:45 மணிக்கு, சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி, லாரிஓட்டி வந்த, சங்ககிரி, பச்சக்காட்டை சேர்ந்த முருகன், 'பிரேக் பிடிக்கவில்லை' எனக்கூச்சலிட்டபடி ஓட்டி வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியதில், அம்சராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சரண்யா, குழந்தை தனுஷ், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சங்ககிரி போலீசார், லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.
மற்றொரு விபத்து
கொங்கணாபுரம், நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 39. சங்ககிரியில் உள்ள லாரி பட்டறையில் பெயின்டிங் வேலை செய்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு பட்டறையில் வேலை செய்ய, கெமிக்கல் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த டாரஸ் லாரி, பழனிசாமி பின்புறம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். அவரது தந்தை கருப்பன் புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரித்ததில், டாரஸ் லாரி டிரைவர், தர்மபுரி மாவட்டம் கத்திரிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என தெரிந்தது. அவரை போலீசார் தேடுகின்றனர்.